இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் அபார வெற்றி
இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது.;
ராவல்பிண்டி,
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 11ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 48.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இலங்கையை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் வென்றது.