ரஞ்சி டிராபி: ஐதராபாத் அணி கேப்டனாக சிராஜ் நியமனம்
ஐதராபாத் அணியின் கேப்டனாக திலக் வர்மா செயல்பட்டு வந்தார்;
ஐதராபாத்,
ரஞ்சி டிராபி தொடரில் ஐதாராபாத் அணியின் கேப்டனாக இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத் அணியின் கேப்டனாக திலக் வர்மா செயல்பட்டு வந்தார். அவர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கேப்டனாக சிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வருகிற 22-ந்தேதி மும்பையையும், ஜனவரி 29-ந்தேதி சத்தீஸ்கர் அணியையும் ஐதராபாத் எதிர்கொள்கிறது.