ஐசிசி சிறந்த வீரராக ஸ்டார்க் தேர்வு
3 வீரர் மற்றும் வீராங்கனைகளை அடங்கிய பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி அறிவித்தது.;
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சிறந்த வீரர், வீராங்கனைகளை மாதந்தோறும் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை அடங்கிய பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி அறிவித்தது.
இதில் சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிரீவ்ஸ், நியூசிலாந்து வீரர் ஜேக்கப் டபி ஆகியோர் இடம் பெற்றனர்.இந்த நிலையில், ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்டார்க் கடந்த டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வர்ட் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.