டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் கில், கோலியை பின்னுக்கு தள்ளிய திலக் வர்மா

இந்த சாதனை பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் முதலிடத்தில் உள்ளார்.;

Update:2025-12-15 16:04 IST

image courtesy:PTI

தர்மசாலா,

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டி20 போட்டி தர்மசாலாவில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்க்ரம் 61 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா 26 ரன்களுடனும், ஷிவம் துபே 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த ஆட்டத்தில் திலக் வர்மா 24 ரன்கள் அடித்திருந்தபோது டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்களை கடந்தார். இந்த 4,000 ரன்கள் மைல்கல்லை அவர் 125 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 4,000 ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் சுப்மன் கில் மற்றும் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி திலக் வர்மா 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த சாதனையில் ருதுராஜ் கெய்க்வாட் முதலிடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்:

1. ருதுராஜ் கெய்க்வாட் - 116 இன்னிங்ஸ்கள்

2. கே.எல்.ராகுல் - 117 இன்னிங்ஸ்கள்

3. திலக் வர்மா - 125 இன்னிங்ஸ்கள்

4. சுப்மன் கில் - 129 இன்னிங்ஸ்கள்

5. விராட் கோலி - 138 இன்னிங்ஸ்கள்

Tags:    

மேலும் செய்திகள்