தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: இம்பேக்ட் வீரர் விருது வென்றது யார்..?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 இந்திய அணி தொடரை கைப்பற்றியது.;
image courtesy: BCCI
ஆமதாபாத்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்திய அணி 3-1 (4-வது போட்டி ரத்து) என்ற கணக்கில் கைப்பற்றியது.
முன்னதாக ஒவ்வொரு தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. ‘இம்பேக்ட் வீரர்’ விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் இம்பேக்ட் வீரராக திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ‘இம்பேக்ட் வீரர்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.