பிராட்மேனின் சாதனையை சமன் செய்த ஹெட்

கடைசியாக ஆடிய 4 டெஸ்டுகளிலும் சதம் அடித்துள்ளார்.;

Update:2025-12-20 07:30 IST

அடிலெய்டு,

ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் சதமடித்தார். அவர் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் கடைசியாக ஆடிய 4 டெஸ்டுகளிலும் (வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 175 ரன், 119 ரன், இந்தியாவுக்கு எதிராக 140 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 142 ரன்) சதம் அடித்துள்ளார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் குறிப்பிட்ட மைதானத்தில் தொடர்ச்சியாக 4 சதம் கண்ட 5-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவை சேர்ந்த டான் பிராட்மேன் (மெல்போர்ன் மைதானம்), மைக்கேல் கிளார்க் (அடிலெய்டு), ஸ்டீவன் சுமித் (மெல்போர்ன்), இங்கிலாந்தின் வாலி ஹேமன்ட் (சிட்னி) ஆகியோர் ஆஸ்திரேலிய மைதானத்தில் தொடர்ச்சியாக தலா 4 சதம் அடித்துள்ளனர். அந்த சாதனை பட்டியலில் டிராவிஸ் ஹெட் இணைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்