டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா மாபெரும் சாதனை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.;

Update:2025-11-17 18:41 IST

image courtesy:ICC

கொல்கத்தா,

இந்தியா- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன் இலக்கை கூட விரட்டிப் பிடிக்க முடியாமல் இந்திய அணி 93 ரன்னில் அடங்கி படுதோல்வி அடைந்தது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது.

டெஸ்டில் பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி தோற்றதில்லை என்ற பெருமை இந்த போட்டியிலும் தொடர்கிறது. அவரது கேப்டன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்கா 10-ல் வெற்றியும், ஒன்றில் ‘டிரா’வும் சந்தித்துள்ளது. இதன் மூலம் டெஸ்டில் தோல்வியே சந்திக்காமல் அதிவேகமாக 10 வெற்றிகளை தேடித்தந்த கேப்டன் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்