3வது ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற பாகிஸ்தான்

இலங்கை 45.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது.;

Update:2025-11-16 23:03 IST

ராவல்பிண்டி,

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. ராவல்பிண்டியிலுள்ள மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை 45.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் 44.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழந்து 215 எடுத்தது. இதன் மூலம் இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்