யு19 உலகக்கோப்பை: வங்காளதேச அணிக்கு 239 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
மழையால் போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .;
ஜார்ஜியா,
16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது .பிப்ரவரி 7-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஹக்கீம் தமீம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் ஆயுஷ் மாத்ரே 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். திரிவேதி ரன் எதுவும் எடுக்காமலும், விஹான் மல்ஹோத்ரா 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
தொடக்கத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் வைபவ் சூர்யவன்ஷி , அபிகியான் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட இருவரும் அரைசதமடித்தனர். அபிகியான் 80 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 72 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் இந்திய அணி 48.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்காளதேச அணியில் பஹத் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
மழையால் போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .