விஜய் ஹசாரே கோப்பை: ஐதராபாத் அணியை வீழ்த்தி பரோடா வெற்றி
37 ரன்கள் வித்தியாசத்தில் பரோடா அணி வெற்றி பெற்றது.;
ஜெய்ப்பூர்,
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் - பரோடா அணிகள் மோதின.
அதன்படி, முதலில் பேட் செய்த பரோடா அணியில் சிறப்பாக விளையாடி அமித் பாஸி, நித்யா பாண்டியா இருவரும் சதமடித்து அசத்தினர். அமித் பாஸி 127 ரன்களும், நித்யா பாண்டியா 122 ரன்களும் எடுத்தனர்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 417 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 418 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஐதராதபாத் அணி 49.5 ஓவர்களில் 380 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அபிரத் ரெட்டி , பிரானே ரெட்டி ஆகிய இருவரும் சதமடித்தனர். இருப்பினும் ஐதராபாத் அணியால் இலக்கை எட்ட முடிவில்லை.
இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் பரோடா அணி வெற்றி பெற்றது.