நியூசிலாந்து தொடரில் விளையாடும் முகமது ஷமி ?
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இடம் பெறுவார் என கூறப்படுகிறது.;
புதுடெல்லி,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11ஆம் தேதி தொடங்க உள்ளது. ஜன. 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. டி20 போட்டிகளை பொறுத்தவரை ஜன.21, 23,25, 28,31 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இடம் பெறுவார் என கூறப்படுகிறது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி இருந்தார். அதன் பிறகு காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக முகமது ஷமி இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார்.இதற்கிடையே 2027-ம் ஆண்டு உலக கோப்பையில் முகமது ஷமியை சேர்ப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பி.சி.சி.ஐ.) பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால், முதல் கட்டமாக அவர் நியூசிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.