விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி தொடர்ந்து 3-வது தோல்வி

ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தமிழக அணி, ஜார்கண்டை எதிர்கொண்டது.;

Update:2026-01-01 12:18 IST

ஆமதாபாத்,

33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. நேற்று 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

ஆமதாபாத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) முன்னாள் சாம்பியனான தமிழக அணி, ஜார்கண்டை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற ஜார்கண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த தமிழக அணி 45 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பிரதோஷ் ரஞ்சன் பால் 49 ரன்களும், பாபா இந்திரஜித் 48 ரன்களும் எடுத்தனர். கேப்டன் என்.ஜெகதீசன் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

தொடர்ந்து ஆடிய ஜார்கண்ட் 41 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 244 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பெற்றது. ஷிகர் மோகன் 90 ரன்களில் கேட்ச் ஆனார். உத்கர்ஷ் சிங் 123 ரன்களுடனும் (120 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்), விராட் சிங் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4-வது லீக்கில் ஆடிய தமிழக அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வியாகும். இதன் மூலம் தமிழக அணியின் கால்இறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது.

Tags:    

மேலும் செய்திகள்