விஜய் ஹசாரே கோப்பை : கர்நாடகா, சவுராஷ்டிரா அணிகள் அரையிறுதிக்கு தகுதி

முதலாவது காலிறுதி ஆட்டத்தில் கர்நாடக அணி, மும்பையை எதிர்கொண்டது.;

Update:2026-01-13 15:49 IST

பெங்களூரு,

33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் முதலாவது காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி, மும்பையை எதிர்கொண்டது.

முதலில் பேட் செய்த மும்பை அணி 50 ஓவர்களில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷம்ஸ் முலானி 86 ரன் எடுத்தார்.

பின்னர் ஆடிய கர்நாடக அணி 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தின் முடிவை அறிய உள்ளூர் கிரிக்கெட்டுக்குரிய வி.ஜே.டி. விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக அணி 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கர்நாடகா அரையிறுதிக்கு முன்னேறியது. 

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசம்- சவுராஷ்டிரா அணிகள் சந்தித்தன. இதில் முதலில் ஆடிய உத்தரபிரதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 310 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா 40.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் வி.ஜே.டி.விதிமுறைப்படி சவுராஷ்டிரா அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்