நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!

வாஷிங்டன் சுந்தர் விலகியது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.;

Update:2026-01-12 13:36 IST

மும்பை,

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டரும், தமிழகத்தை சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில், இடுப்பு வலி காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். வாஷிங்டன் சுந்தர் விலகியது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே திலக் வர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. 

 

Tags:    

மேலும் செய்திகள்