விஜய் ஹசாரே கோப்பை:காலிறுதியில் டெல்லி அணி தோல்வி
விதர்பா அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.;
பெங்களூரு,
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் டெல்லி - விதர்பா அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. அந்த அணியில்ய ரதோத் 88 ரன்களும், அதர்வா தைடே 56 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 45.1 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விதர்பா அணியில் நச்கட் புட்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .
இதனால் விதர்பா அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.