மகளிர் கால்பந்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தமான வீராங்கனை
20 வயதான ஒலிவியா சுமித்தை ரூ.11½ கோடிக்கு வாங்க அர்செனல் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.;
கோப்புப்படம்
லண்டன்,
கனடா கால்பந்து அணியின் இளம் வீராங்கனையான ஒலிவியா சுமித் கிளப் போட்டிகளில் இங்கிலாந்தை சேர்ந்த லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்தார். முன்கள வீராங்கனையான அவர் அந்த கிளப்புக்காக 25 ஆட்டங்களில் 9 கோல் அடித்துள்ளார். அவரை மற்றொரு இங்கிலாந்து கிளப் அணியான அர்செனல் வாங்க முயற்சித்து வந்தது.
இரு கிளப் நிர்வாகத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதன்படி லிவர்பூல் அணியில் இருந்து 20 வயதான ஒலிவியா சுமித்தை ரூ.11½ கோடிக்கு வாங்க அர்செனல் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் மகளிர் கால்பந்து வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீராங்கனை என்ற சிறப்பை ஒலிவியா பெற்றார்.
இதற்கு முன்பு சான் டியாகோ கிளப்பில் இருந்து நவோமி கிர்மாவை (அமெரிக்கா) ரூ.9½ கோடிக்கு செல்சி அணி வாங்கியதே அதிகபட்சமாக இருந்தது. அத்துடன் ஒலிவியா சுமித் 4 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.