உலகக் கோப்பை கால்பந்து: போட்டி அட்டவணை அறிவிப்பு

இந்த தொடரில் முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன.;

Update:2025-12-06 16:36 IST

image courtesy: twitter/@FIFAcom

வாஷிங்டன்,

உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.

முதல் முறையாக இந்த உலகக் கோப்பையில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கு முன்பு 32 அணிகள்தான் விளையாடின. தற்போது 16 நாடுகள் கூடுதலாக இடம் பெற்றுள்ளன.

போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக தகுதிபெற்றுள்ளன. மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்று மூலம் 39 நாடுகள் என இதுவரை 42 நாடுகள் உலகக் கோப்பை யில் ஆடுவது உறுதியாகி உள்ளது. இன்னும் 6 நாடுகள் தகுதி பெற வேண்டும். அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் இந்த 6 நாடுகள் உறுதியாகி விடும்.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்கும் 48 அணிகளும் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்றுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங் களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 8 அணிகள் என 32 நாடுகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு:-

பிரேசில்

‘ஏ’ பிரிவு: மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, தகுதி சுற்று அணி.

‘பி’ பிரிவு: கனடா, கத்தார், சுவிட்சர்லாந்து, தகுதி சுற்று அணி.

‘சி’ பிரிவு: பிரேசில் மொராக்கோ, ஸ்காட்லாந்து, ஹைதி.

‘டி’ பிரிவு: அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, தகுதி சுற்று அணி.

‘இ’ பிரிவு: ஜெர்மனி, ஐவேரி கோஸ்ட், ஈக்வடார், குராசோ.

‘எப்’ பிரிவு: நெதர்லாந்து, ஜப்பான், துனிசியா, தகுதி சுற்று அணி.

‘ஜி’ பிரிவு: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூசிலாந்து.

‘எச்’ பிரிவு: ஸ்பெயின், உருகுவே, சவுதி அரேபியா, கேப்வெர்டே.

‘ஐ’ பிரிவு: பிரான்ஸ், செனகல், நார்வே, தகுதி சுற்று அணி.

‘ஜே’ பிரிவு: நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்.

‘கே’ பிரிவு: போர்ச்சுக்கல், உஸ்பெகிஸ்தான், கொலம்பியா, தகுதி சுற்று அணி.

‘எல்’ பிரிவு: இங்கிலாந்து, குரோஷியா, காணா, பனாமா.

ஜூன் 11-ந்தேதி நடை பெறும் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள மெக்சிகோ- தென் ஆப்பிரிக்கா அணிகளும், தென் கொரியா- தகுதி சுற்று அணிகளும் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி முதல் ஆட்டத்தில் அல்ஜீரியாவுடனும் மோதுகிறது.

இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 104 ஆட்டங்கள் 3 நாடுகளில் உள்ள 16 நகரங்களில் நடக்கிறது. ஜூன் 27-ந்தேதி யுடன் லீக் ஆட்டம் முடிகிறது. அதன் பிறகு நாக்-அவுட் சுற்று தொடங்குகிறது. இறுதிப் போட்டி ஜூலை 19-ந்தேதி நியூஜெர்சியில் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்