திருவள்ளூர் பிரிமீயர் லீக் ஆக்கி: ஜி.எஸ்.டி அணி வெற்றி
3-வது திருவள்ளூர் பிரிமீயர் லீக் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
சென்னை,
3-வது திருவள்ளூர் பிரிமீயர் லீக் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரி அணி 6-3 என்ற கோல் கணக்கில் மாஸ்கோ மேஜிக்கை தோற்கடித்தது.
ஜி.எஸ்.டி அணியில் அபிஷேக், பாலாஜி தால 2 கோலும், துசால், ஜான் தலா ஒரு கோலும் அடித்தனர். மாஸ்கோ மேஜிக் அணியில் சூரஜ், விக்னேஷ், அருள் அபியா பதில் கோல் திருப்பினர்.