டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இத்தாலி சாம்பியன்
இறுதிப்போட்டியில் இத்தாலி - ஸ்பெயின் அணிகள் மோதின.;
image courtesy:twitter/@DavisCup
போலோக்னா,
டேவிஸ் கோப்பை டென்னிசில் இத்தாலியில் உள்ள போலோக்னா நகரில் நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் இத்தாலி - ஸ்பெயின் அணிகள் மோதின.
இதில் முதல் இரு ஒற்றையர் ஆட்டங்களில் இத்தாலியின் பெரேட்டினி, பிளவியோ கோபோலி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இத்தாலி 2-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.