பென்சில் காதலர்

ஈரானில் உள்ள தெஹ்ரானில் அமைந்திருக்கும் பென்சில் கடை இது. இங்கு ஆயிரக்கணக்கான பென்சில்கள் அடுக்கடுக்கான தோற்றத்தில் அழகுடன் மிளிர்கின்றன.

Update: 2023-09-15 15:45 GMT

வேறு எங்கும் பார்த்திராத வித்தியாசமான, வண்ண நிறமுடைய பென்சில்களை இங்கு வாங்கலாம். இந்த கடையை முகமது ரபி என்பவர் 1990-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர் வண்ணமயமான உலகத்தை கட்டமைக்க விரும்பினார். இறுதியில் வண்ணமயமான பென்சில்களால் தனது ஆசையை பூர்த்தி செய்துவிட்டார்.

எந்த நிறத்தில், டிசைனில் பென்சில் கேட்டாலும் நொடியும் தாமதிக்காமல் சட்டென்று எடுத்து கொடுத்துவிடுகிறார். அந்த அளவுக்கு பென்சில் காதலராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்