கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியில்லை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை,
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக அன்பரசன் என்பவரை வேட்பாளராக அறிவித்து இருந்தது. அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டு இருந்த நிலையில், இன்று அதிமுக தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது. பாஜக மேலிட தலைவர்கள் தொலைபேசி மூலமாக விடுத்த கோரிக்கையை ஏற்று வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர்களும் வாபஸ் பெற்ற நிலையில், அதிமுகவும் வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது.
Next Story