தமிழகத்தில் மேலும் 386 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 386 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 April 2023 3:16 PM GMT (Updated: 10 April 2023 3:18 PM GMT)

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,099 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 38,051 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையின் பாதிப்பு வீரியமாக இல்லை. தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவை என்ற நிலை தற்போது இல்லை. தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பு இல்லை; தனித்தனியே பாதிப்பு ஏற்படுகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது குறிப்பிடத்தக்கது.


Next Story