ஐபிஎல்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி...!


ஐபிஎல்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி...!
x
தினத்தந்தி 18 May 2023 5:44 PM GMT (Updated: 18 May 2023 5:56 PM GMT)

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற பெங்களூருஅணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி ஆட்டமிழக்க, கேப்டன் மார்க்ரேம் மற்றும் கிளாஸன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய கிளாஸன் 49 பந்துகளில் சதம் அடிக்க, ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 187 ரன்கள் என்ற வெற்றி இலக்கில் பெங்களூரு அணியில் முதலில் களமிறங்கிய விராட் கோலி, டு பிளெசிஸ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் கடந்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 62 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு சதமடித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் டு பிளெசிஸ், நடராஜன் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் மற்றும் பிரேஸ்வெல் இணைந்து வெற்றி இலக்கை எட்டச்செய்தனர். முடிவில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 100 ரன்களும், டு பிளெசிஸ் 71 ரன்களும் குவித்தனர்.


Next Story