"தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வரவேண்டும்" பரூக் அப்துல்லா அழைப்பு


தமிழக முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வரவேண்டும்  பரூக் அப்துல்லா அழைப்பு
x
தினத்தந்தி 1 March 2023 1:53 PM GMT (Updated: 1 March 2023 1:55 PM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்து கொண்டு பேசியதாவது:-

ஒரு சிறந்த தலைவரின் மகன் நீங்கள். உங்கள் தந்தையும், என் தந்தையும், ஒரு சிறந்த இந்தியாவைக் கட்டமைக்கப் பாடுபட்டனர். நீங்கள் தேசிய அரசியலுக்கு வாருங்கள். உங்கள் மாநிலத்தின் வளர்ச்சியைத் தேசிய அளவில் காட்டுங்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே உழைத்து வருகிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வரவேண்டும்.

நாடு தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியம் இல்லை, அதற்கு நாம் அனைவரும் முதலில் ஒன்றிணைய வேண்டும் என்றார்.


Next Story