தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் - பிரதமர் மோடி


தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 March 2023 9:46 AM GMT (Updated: 17 March 2023 9:51 AM GMT)

தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். தமிழ்நாடு, தெலுங்கானா,கர்நாடகா,மராட்டியம், குஜராத் மத்திய பிரதெசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என தெரிவித்த பிரதமர் மோடி, மித்ரா மெகா ஜவுளி பூங்காக்கள் ஜவுளித்துறையை மேலும் வலுப்படுத்த உதவும் என்றார். மேலும் புதிதாக அமைக்கப்பட உள்ள ஜவுளி பூங்காக்கள் ஜவுளித்துறைக்கான அதிநவீன உள்கட்டமைப்பு வழங்கும் என பிரதமர் மோடி கூறினார்.


Next Story