புகையிலை பொருட்கள் விற்ற 15 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 15 பேர் கைது
x

புதுவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

புகையிலைக்கு தடை

புதுவையில் பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடையையும் மீறி இதுபோன்ற பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது சோதனை நடத்தி போலீசார் இதனை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

லாஸ்பேட்டை

இதனிடையே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக லாஸ்பேட்டை முருகர்கோவில் தெருவை சேர்ந்த முத்து (வயது 52), காமன்கோவில் வீதியை சேர்ந்த முருகன் (57), நாவற்குளம் பிரின்ஸ் (48), நேருவில் நகரை சேர்ந்த பாலசந்திரன் (44), கல்லூரி சாலையை சேர்ந்த சக்திவேல் ஆகியோரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் மூலக்குளம் களத்துமேட்டை சேர்ந்த ஏசுதாஸ் (50), மேரி உழவர்கரையை சேர்ந்த கோதண்டபாணி (63), உழவர்கரை கல்லறை வீதியை சேர்ந்த மொய்சன் (45) ஆகியோரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர். சாரம் 45 அடி ரோட்டை சேர்ந்த கார்த்திக்கை (40) கோரிமேடு போலீசாரும், சேதராப்பட்டு மெயின்ரோட்டை சேர்ந்த சுதாகர் சாகுவை (47) சேதராப்பட்டு போலீசாரும் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம்

மங்கலட்சுமி நகரில் புகையிலை பொருட்கள் விற்றதாக சுப்பையா நகரை சேர்ந்த ஜெகராமை (50) உருளையன்பேட்டை போலீசாரும், நெட்டப்பாக்கம் வங்கி தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (57), கம்பத்தம் தெருவை சேர்ந்த ராமலிங்கம் (70), நடுத்தெருவை சேர்ந்த சுந்தரவேல் (60) ஆகியோரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

வில்லியனூர் மேற்கு மாட வீதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக வீரவாஞ்சி நகரை சேர்ந்த ராஜேந்திரன் (54) என்பரை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர். ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 15 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


Next Story