புதுச்சேரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்


புதுச்சேரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்
x

தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

புதுச்சேரி,

தமிழ்நாடு, புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு 12 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

புதுச்சேரியில் 'இந்தியா' கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. மீண்டும் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 31-ந் தேதி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரியில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறார். பிரசார கூட்டத்தில் வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு இன்று காலை 9.40 மணிக்கு கார் மூலமாக மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டுச்செல்கிறார்.


Next Story