நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் யார்..யார்..வேட்புமனு ஏற்பு


நாடாளுமன்ற தேர்தல்:  தமிழகத்தில் யார்..யார்..வேட்புமனு ஏற்பு
x
தினத்தந்தி 28 March 2024 7:59 AM GMT (Updated: 28 March 2024 12:31 PM GMT)

மனுக்களை பரிசீலனை செய்யும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன்(மார்ச் 27) நிறைவடைந்தது. மனுக்களை பரிசீலனை செய்யும் பணி இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாளை வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஏற்கப்பட்ட மனுக்கள் குறித்த விவரம் வெளியாகி வருகிறது.

* கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு

* தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி வேட்புமனு ஏற்பு

* கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மலையரசன், அ.தி.மு.க வேட்பாளர் குமரகுரு, பா.ம.க வேட்பாளர் தேவதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீசன் பாண்டியன் ஆகியோரின் மனுக்கள் ஏற்பு.

* வடசென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்பு

* மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க, பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி ஆகிய பிரதான கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

* விருதுநகர் மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாக்கூர், நாம் தமிழர் கட்சியின் கவுசிக் வேட்பு மனுக்கள் ஏற்பு

* நீலகிரி தொகுதியில் பா.ஜ.க.வேட்பாளர் எல்.முருகன், திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்புமனு ஏற்பு

* பா.ஜ.க. கூட்டணி கட்சியின் தர்மபுரி வேட்பாளர் சவுமியா அன்புமணியின் வேட்பு மனு ஏற்பு

* ஈரோட்டில் அ.தி.மு.க.,வின் ஆற்றல் அசோக் குமார் ஆகியோரின் வேட்புமனு ஏற்பு

* தேனியில் அ.தி.மு.க வேட்பாளர் நாராயணசாமி வேட்புமனு ஏற்பு

* ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.பாலு வேட்புமனு ஏற்பு

* திருவள்ளூரில் காங்., கட்சி வேட்பாளர் சசிகாந்த் வேட்புமனு ஏற்பு

* ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 5 பன்னீர் செல்வங்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

*நெல்லையில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனு ஏற்பு

* திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் துரைவைகோ வேட்பு மனு ஏற்பு

* சேலம் மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வகணபதியின் மனு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மாற்றுவேட்பாளர் சம்பத்தின் வேட்புமனு ஏற்பு

* சிதம்பரம் மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் வி.சி.க தலைவர் திருமாவளவன் வேட்பு மனு ஏற்பு.

* சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வ கணபதியின் வேட்புமனு ஏற்பு

* 5 மணி நேர பரீசீலனைக்கு பிறகு டிடிவி.தினகரன் வேட்புமனு ஏற்பு

* மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு


Next Story