'பிரதமர் மோடியின் வருகை எங்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது' - தமிழிசை சவுந்தரராஜன்


பிரதமர் மோடியின் வருகை எங்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது - தமிழிசை சவுந்தரராஜன்
x

பிரதமர் மோடியை காண அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடியதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை,

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளரான தமிழிசை சவுந்தரராஜன், பட்டினப்பாக்கம் பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தது பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாக குறிப்பிட்டார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது;-

"நேற்றைய தினம் பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தந்தது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. பிரதமர் மோடியை காண அதிக அளவில் மக்கள் கூடினர். ஆனால் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் கூட்டமே வரவில்லை என பிரசாரம் செய்கிறார்கள்.

அவர்கள் தற்போது பதற்றமடைந்துள்ளனர். பிரதமர் மோடியை காண வந்தவர்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதையும் மீறி மக்கள் வந்திருக்கிறார்கள்." இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.




Next Story