‘காலா’ படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்


‘காலா’ படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்
x
தினத்தந்தி 11 July 2017 4:15 AM IST (Updated: 11 July 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

‘காலா’ படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து நேற்று சென்னை திரும்பினார்.

ஆலந்தூர்,

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மே மாதம் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். டைரக்டர் ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் 28-ந்தேதி மும்பையில் தொடங்கியது.

இதில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் மே 27-ந்தேதி மும்பைக்கு சென்றார். அங்கு 11 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஜூன் 8-ந்தேதி மும்பையில் இருந்து சென்னை திரும்பினார்.

‘காலா’ படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் கடந்த மாதம் 22-ந்தேதி மாலை சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். மும்பையில் 5 நாள் படப்பிடிப்புக்கு பின்னர், அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்றார்.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதில் கலந்துகொள்ள நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களின் கேள்விக்கு பதில் எதுவும் அளிக்காமல் காரில் புறப்பட்டு சென்றார்.

Next Story