அஜித்தின் 'வலிமை' பட சண்டை காட்சிகளுக்கு ஜேம்ஸ்பாண்ட் பட சண்டை பயிற்சியாளர் ஒப்பந்தம்? + "||" + Ajith's strength for the movie fight scenes Jamesband Image Fighting Coach Agreement?
அஜித்தின் 'வலிமை' பட சண்டை காட்சிகளுக்கு ஜேம்ஸ்பாண்ட் பட சண்டை பயிற்சியாளர் ஒப்பந்தம்?
அஜித்தின் 'வலிமை' படத்திற்கு ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு சண்டை காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகள் அமைக்கும் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து 'வலிமை' படத்தில் நடிக்கிறார் அஜித். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி 'வலிமை' படம் பூஜையுடன் தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிகர் அஜித், காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மேலும் அஜித்தின் 'கார் சேசிங்' காட்சிகளும் இடம் பெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் 'கார் சேசிங்' காட்சிகளை பிரமாண்டமாக அமைத்துக் கொடுக்கும் ஹாலிவுட் கலைஞர்களில் ஒருவரான ஹென் கொலின்ஸ் என்பவரை தமிழகத்துக்கு அழைத்து வர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு சண்டைக் காட்சிகள் மற்றும் 'கார் சேசிங்' காட்சிகளை அமைத்தவர் ஹென் கொலின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.