திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை - நடிகை ஓவியா


திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை - நடிகை ஓவியா
x
தினத்தந்தி 11 July 2020 7:17 AM GMT (Updated: 11 July 2020 7:17 AM GMT)

திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என நடிகை ஓவியா கூறி உள்ளார்.

சென்னை

கொரோனா ஊரடங்கில் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் ஓவியா. அதில் சில கேள்விகளும் பதில்களும்:

கேள்வி: உங்களுக்குப் பிடித்த 'பிக் பாஸ்' போட்டியாளர்?

பதில்: ஓவியா

கேள்வி: உங்களுடைய அடுத்த படங்கள்?

பதில்: இரண்டு வெப் சீரியஸ்

கேள்வி: உங்களுக்கு காதலர் இருக்கிறாரா?

பதில்: இல்லை. நான் சிங்கிள்

கேள்வி: வாரிசு அரசியல் பற்றி உங்கள் கருத்து?

பதில்: அரசியல் அனைத்து இடத்திலும் உள்ளது.

கேள்வி: திரைத்துறையில் இல்லாவிட்டாலும் எப்படி உங்கள் ரசிகர்களைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்

பதில்: ரசிகர்களின் பெயரால் மக்களை முட்டாளாக்க நான் ஒன்றும் புகழ் விரும்பி இல்லை. நீங்கள் விரும்பினால் என்னை விரும்பலாம், வெறுக்க வேண்டும் என்றால் வெறுக்கலாம். அவ்வளவுதான்.

கேள்வி: இது ஒரு கடினமான சூழல் என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த தனிமைப்படுத்தலில் நாம் நம்முடைய மனநலத்தில் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது குறித்து உங்களால் ஏதேனும் குறிப்பிட முடியுமா?

பதில்: நம்முடைய கஷ்டங்களை அடுத்தவரால் அதை அனுபவிக்கும் வரை புரிந்து கொள்ள இயலாது. இதை நீங்கள் தான் சமாளிக்க வேண்டும். யாரும் உங்களை வந்து காப்பாற்றப் போவதில்லை. இது உங்கள் வாழ்க்கை. அதற்காக நீங்கள் செய்யவிரும்புவதைச் செய்யுங்கள். அனைத்தும் உங்கள் கையில் தான் உள்ளது. உறுதியாக இருங்கள்.

கேள்வி: நீண்ட நாட்களாக எந்த ட்வீட்களும் போடவில்லையே ஓவியா? தற்போது போய்க் கொண்டிருக்கும் சமூக பிரச்சினைகளுக்கு உங்கள் குரலை எழுப்ப இயலுமா?

பதில்: இல்லை. உண்மையான குற்றவாளிகளை தண்டிக்கும் அதிகாரம் எனக்கு கிடைக்காமல் நிஜ வாழ்வில் நான் நடிக்க மாட்டேன்.

கேள்வி: அடுத்தது படமா அல்லது திருமணமா?

பதில்: திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை

கேள்வி: இப்போதெல்லாம் டுவிட்டரில் நீங்கள் தொடர்ச்சியாக இயங்குவதில்லையே...

பதில்: நான் கணிக்க முடியாதவள் என கூறி உள்ளார்.

Next Story