‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘முதல் சிங்கிள்’ அக்டோபர்-4 வெளியாகிறது


‘அண்ணாத்த’  திரைப்படத்தின்  ‘முதல் சிங்கிள்’  அக்டோபர்-4  வெளியாகிறது
x
தினத்தந்தி 1 Oct 2021 2:15 PM GMT (Updated: 1 Oct 2021 2:15 PM GMT)

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘முதல் சிங்கிள்’ அக்டோபர்-4ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

சென்னை,

‘அண்ணாத்த’  திரைப்படத்தின் ‘முதல் சிங்கிள்’ அக்டோபர்-4ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  இந்த பாடலை பாடியுள்ளார்.  

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை டைரக்டர்  சிவா இயக்குகிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். 

‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது.

நவம்பர் 4 ந்தேதி தீபாவளி அன்று  அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன. ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்துவிட்டார். 

முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்  விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த நிலையில் டி.இமான் இசையில் கவிஞர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பி பாடியுள்ளதால் பர்ஸ்ட் சிங்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story