அஜித்தின் ஷூட்டிங்கில் கார் விபத்து; நடந்தது என்ன? உண்மையை விளக்கும் சுரேஷ் சந்திரா


அஜித்தின் ஷூட்டிங்கில் கார் விபத்து; நடந்தது என்ன? உண்மையை விளக்கும் சுரேஷ் சந்திரா
x

அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் இப்போது 'விடா முயற்சி'யில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கி வரும் படமிது. வெளிநாட்டில் நடக்கிற கதை இது என்பதால், படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. கடந்த நவம்பரில் நடந்த விஷயத்தை இப்போது பதிவிட்டது ஏன், அந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்ற கேள்விக்கு சுரேஷ் சந்திரா பதில் அளித்துள்ளார்

"கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி அஜர்பைஜானில் ஷூட்டிங் போயிட்டிருந்தது. காட்சிப்படி அஜித் சார், காரை வேகமாக ஓட்டி, அவருக்கு முன்னாடி போற காரை விரட்டிப் பிடிக்கணும். அதுக்காக அஜித் சார் தன்னோட காரை படு ஸ்பீடா ஓட்டுற சீனை எடுத்திட்டு இருந்தாங்க. சேஸிங் சீன் என்பதால், டிரோன் வச்சு, படமாக்கினாங்க. காருக்குள்லேயும் மினி கேமரா வச்சும் ஷூட் பண்ணிட்டு இருந்தாங்க.

அந்த சீன்ல கார் வேகமா போகும் போது யாரும் எதிர்பாரத விதமா கார் அப்படியே ஸ்கிட் ஆகிடுச்சு. ரோட்டுல இருந்து உருண்டு பள்ளத்துல கவிழ்ந்திடுச்சு. மொத்த யூனிட்டுமே பதறிப் போய் அஜித் சாரை நோக்கி ஓடினாங்க. அதற்குள் அங்கிருந்து எனக்கும் போன் வந்திடுச்சு. போன் செய்தவர்கள் எல்லோருமே 'வண்டி ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. சாரும் விழுந்திட்டார்'ன்னு பதைபதைப்போடு சொன்னாங்க. நானுமே பதறிப்போயிட்டேன். அதன்பிறகு, அஜித் சாரே பேசின பிறகுதான் நிம்மதியாச்சு.

அஜித் சார் ஓட்டின வண்டி ஹம்மர் கார் என்பதால், அவருக்கு பெரிசா எந்தப் பாதிப்பும் இல்லாமல் காரிலிருந்து வெளியே வந்துட்டார். வந்ததும் உடனே மெடிக்கல் செக்கப்பும் செய்து, ஒண்ணும் ஆகலைன்னு தெரிந்த பிறகு ஷுட்டிங்கையும் தொடர்ந்திருக்கார். இந்த வீடியோ இப்ப வெளியிட காரணமிருக்கு. ஏன்னா, இப்படி ரிஸ்க் எடுத்து நடிக்கிறாங்க. ஆனா, பலரும் படம் டிராப் ஆகிடுச்சுனு சொல்றப்ப, அதில் உழைத்த அத்தனை பேருக்கும் மனசு கஷ்டமா இருக்கு. அதனால ரசிகர்களுக்கும் படத்தோட டீமுக்கும் மனத் தெம்பையும் உற்சாகமும் அளிக்கும் விதமாக இந்த வீடியோவை வெளியிட்டோம்.

'விடா முயற்சி' டீம் அடுத்த ஷெட்யூல் கிளம்ப ரெடியாகிட்டாங்க. தேர்தல் முடிந்த அடுத்த நாளே, வெளிநாடு பறக்கிறது யூனிட். இதுவரை 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அனிருத் பாடல்கள் கொடுத்த பிறகு, படப்பிடிப்புக்குக் கிளம்பிடுவாங்க. படத்தை அக்டோபர்ல வெளியிடத் திட்டமிட்டிருக்காங்க!" என்கிறார் சுரேஷ் சந்திரா.


Next Story