ராஷ்மிகா பகிர்ந்த முதல் பட அனுபவம்


ராஷ்மிகா பகிர்ந்த முதல் பட அனுபவம்
x

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள விரஜ்பேட்டையில் பிறந்தவர். 2014-ல் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்து, 2016-ல் 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமான அனுபவங்களை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "கிரிக் பார்ட்டி கன்னட படத்தில் நடிக்க டைரக்டர் எனக்கு போன் செய்தார். என்னை சும்மா சீண்டுவதற்காக யாரோ பேசுகிறார்கள் என்று நினைத்து சினிமாவில் எனக்கு ஆர்வம் இல்லை சார், போனை வைத்து விடுங்கள் என்று சொல்லி அந்த நம்பரையே பிளாக் செய்து விட்டேன்.

அதன் பிறகு தயாரிப்பாளர்கள், சினேகிதர்கள் முலம் இயக்குனர் என்னிடம் பேச முயற்சி செய்தார். கடைசியாக எனது வகுப்பு ஆசிரியை மூலம் என்னை சந்தித்தனர். அவர்களிடம் எனக்கு நடிக்க தெரியாது என்றேன். என்னிடம் சில வசனங்கள் பேச வைத்து ரெக்கார்டு செய்தனர். பிறகு தேர்வு செய்தார்கள்.

நான் கன்னடத்தில் முதன் முதலாக அறிமுகமான 'கிரிக் பார்ட்டி', தமிழில் அறிமுகமான 'சுல்தான்' தெலுங்கில் முதல் படமான 'செல்லோ', இந்தியில் அறிமுகமான 'மிஷன் மஜ்னு' ஆகியவை அனைத்து மக்களுக்கும் என்னை அறிமுகப்படுத்திய படங்கள். இவை எனது நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் என்றார்.


Next Story