பெற்றோரை பெருமைப்படுத்த இன்னும் சாதிக்க விரும்பும் ராஷ்மிகா


பெற்றோரை பெருமைப்படுத்த இன்னும் சாதிக்க விரும்பும் ராஷ்மிகா
x

சினிமா துறைக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே அதிக ரசிகர்களை சேர்த்து முன்னணி கதாநாயகி பட்டியலில் இடம்பிடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு புஷ்பா படத்தின் வெற்றி பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். தற்போது புஷ்பா 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில், "ஒரு நடிகையாக நான் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறேன். விருதுகளும் பெற்று இருக்கிறேன். ஆனாலும் எனது பெற்றோர் அதை நினைத்து இதுவரை பெருமைப்படவில்லை. காரணம் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே சினிமா துறை பற்றி எதுவும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். நான் என்ன செய்கிறேன் என்பது அவர்களுக்கு முழுமையாக புரியவும் இல்லை.

ஆனால் நான் விருதுகள் வாங்கும்போது சந்தோஷப்படுகிறார்கள். என் பணியை பற்றி அவர்களுக்கு முழு புரிதல் இல்லாவிட்டாலும் எனக்கு தேவையானதை எல்லாம் செய்து கொடுக்கிறார்கள். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். என்னால் முதலில் நிறைய பொருளாதார பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள். அவர்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு தெரியும். அதனால்தான் அவர்கள் உண்மையாக பெருமைப்படும்படி செய்வதற்கு நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது'' என்றார்.


Next Story