வித்தியாசமான தோற்றத்தில் சசிகுமார்


வித்தியாசமான தோற்றத்தில் சசிகுமார்
x

ரா.சரவணன் டைரக்டு செய்துள்ள புதிய படத்தில் இதுவரை செய்யாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்து இருக்கிறார்.

சசிகுமார் தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்த 'காரி' படத்தில் ஜல்லிக்கட்டு வீரர் வேடம் ஏற்றார். நான் மிருகமாய் மாற படத்தில் பயங்கர கொலைகள் செய்யும் சாமானியன் வேடத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ரா.சரவணன் டைரக்டு செய்துள்ள படத்தில் இதுவரை செய்யாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். முகத்தில் ரத்தம் தெறிக்க ஆவேசமாக இருப்பது போன்ற அவரது முதல் தோற்ற புகைப்படத்தை படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அது வைரலாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்துக்கு 'நந்தன்' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் நாயகியாக சுருதி பெரியசாமி நடித்துள்ளார்.


Next Story