நல்ல கதைகளில் நடிக்க விரும்பும் சசிகுமார்


நல்ல கதைகளில் நடிக்க விரும்பும் சசிகுமார்
x

மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், பிரீத்தி, யாஷ்பால் சர்மா ஆகியோர் நடித்து திரைக்கு வந்த அயோத்தி படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவையும் படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர்.

நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க இருப்பதாக சசிகுமார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சசிகுமார் பேசும்போது, "அயோத்தி படத்தை ஓ.டி.டி.க்கு விற்றதால் எந்த புரமோஷனும் செய்யாமல் அவசரமாக வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.. தயாரிப்பாளர் ரவீந்திரன் நம்பிக்கையோடு வெளியிட்டார்.

அதன் பிறகு மக்கள் தங்கள் படமாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். டைரக்டர் மகேந்திரன் நண்டு என ஒரு படம் எடுத்தார். அதில் இதே போல் இந்தி கதாபாத்திரங்கள் இந்தியில் பேசுவார்கள். தயாரிப்பாளர் ஒத்துக்கொள்ளாததால் அது படத்தில் வரவில்லை.

அயோத்தி படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த், சிம்பு ஆகியோர் போன் செய்து பாராட்டினர். ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை இந்தப்படம் காட்டியுள்ளது. அடுத்தும் நான் நல்ல படங்களில்தான் நடிப்பேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்களும் எனக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறார்கள். எந்த மாதிரியான படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்'' என்றார்.


Next Story