சசிகுமார் நடித்துள்ள 'எவிடன்ஸ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு


சசிகுமார் நடித்துள்ள எவிடன்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
x

இயக்குனர் ஆர்டிஎம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் 'எவிடன்ஸ்'.

சென்னை,

தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'அயோத்தி' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி எழுதிய 'குற்றப் பரம்பரை' நாவலை தழுவி வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாக சசிகுமார் தெரிவித்திருக்கிறார்.

தற்போது, சசிகுமார் இயக்குனர் ஆர்டிஎம் இயக்கத்தில் 'எவிடன்ஸ்' படத்தில் நடித்துள்ளார். பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ரான் ஈதன் யோஹன் இசையமைத்துள்ளார். கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நவீன் சந்திரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'எவிடன்ஸ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Next Story