சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ஒளிப்பதிவாளர்!


சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ஒளிப்பதிவாளர்!
x
தினத்தந்தி 13 Feb 2017 8:24 AM GMT (Updated: 13 Feb 2017 8:24 AM GMT)

ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில், பல சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

ஈஸ்வரன் தங்கவேல்

முழு நீள திரைப்படங் களுக்கான பிரிவில், ‘கேரளா பாரடிசோ’ என்ற மலையாள படம் திரையிடப்பட்டது. கலை, கலைஞர்கள் மற்றும் திரைப்படம் ஆகியவற்றை கதைக்களமாக கொண்ட படம், இது. இந்த படத்துக்காக சிறந்த ஒளிப் பதிவுக்கான விருதை தமிழ்நாட்டை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஈஸ்வரன் தங்கவேல் பெற்றுள்ளார்.

இவர், ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், சரவணன் ஆகியோரிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். சதுரங்க வேட்டை, மூடர் கூடம், தேசிங்கு ராஜா ஆகிய படங் களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார்!

Next Story