நயன்தாரா படத்தை கைப்பற்றிய அமலாபால்!


நயன்தாரா படத்தை கைப்பற்றிய அமலாபால்!
x
தினத்தந்தி 27 March 2017 9:14 AM GMT (Updated: 27 March 2017 9:14 AM GMT)

விவாகரத்துக்குப்பின் அமலாபால் அதிக படங்களில் நடிப்பது என்பதில் குறியாக இருக்கிறார்.

அவர் இப்போது, ‘வேலையில்லா பட்டதாரி-2,’ ‘வட சென்னை,’ ‘திருட்டுப்பயலே-2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து, ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற மலையாள படத்தின் தமிழ் ‘ரீமேக்’கில் அரவிந்தசாமியுடன் நடிக்க இருக்கிறார்.

இதையடுத்து, புதுமுக இயக்குனர் வினோத் டைரக்‌ஷனில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் கதாநாயகியாக நடிக்க முதலில் நயன்தாரா ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் அவர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். நயன்தாரா கைவிட்ட படத்தை அமலாபால் கைப்பற்றிக் கொண்டார்!

Next Story