தனுஷ் படங்களுக்கு மும்பையில் வரவேற்பு!


தனுஷ் படங்களுக்கு மும்பையில் வரவேற்பு!
x
தினத்தந்தி 31 July 2017 7:18 AM GMT (Updated: 31 July 2017 7:18 AM GMT)

‘ராஞ்சனா,’ ‘சமிதாப்’ ஆகிய 2 இந்தி படங்கள் மூலம் தனுஷ் வட இந்திய ரசிகர்களுக்கும் அறிமுகமாகி இருப்பதால், அவருடைய புதிய படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகின்றன.

அவர் நடித்த ‘ஹாலிவுட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தனுஷ், ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தை திரைக்கு கொண்டு வரும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்.

இந்த படத்தில், தனுஷ் ஜோடியாக அமலாபால் நடித்து இருக்கிறார். பிரபல இந்தி நடிகை கஜோல், ஒரு முக்கிய வேடத்தில் வருகிறார். படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளிவருகிறது.
இதற்கிடையில் தனுஷ் நடித்த ‘கொடி’ படம், இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. ‘ரவுடி ஹீரோ-2’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த படம், மும்பையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Next Story