புகைப்படத்தின் சம்பளம் 100 கோடி


புகைப்படத்தின் சம்பளம் 100 கோடி
x
தினத்தந்தி 12 Aug 2017 8:15 AM GMT (Updated: 12 Aug 2017 8:15 AM GMT)

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளிவிட்டு ரசிகர்களை கவரும் வழக்கம், நடிகைகளிடம் பரவலாக இருந்து வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகையான கிம் கர்தாஷியன், விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதுடன், அந்த புகைப்படங்களின் மூலம் பெரும் தொகையையும் சம்பாதித்து வருகிறார். இதுவரை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் ரூ.100 கோடி வரை அவர் சம்பாதித்திருக்கிறார். 

இன்ஸ்டாகிராமில் கிம் கர்தாஷியனை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் மில்லியன் கணக்கை தாண்டியிருக்கிறது. அதனால் கிம் கர்தாஷியனின் புகைப்படங்களுக்கு கணிசமான தொகையை இன்ஸ்டாகிராம் நிறுவனம் மதிப்பு தொகையாக வழங்கி வருகிறது. புகைப்படங்கள் வருமானம் ஈட்டித்தரும் வள்ளலாக விளங்குவதால், அலட்டிக்கொள்ளாமல் விதவிதமான புகைப் படங்களை பதிவேற்றம் செய்வதை ஒரு பொழுதுபோக்காக பின்பற்றி வருகிறார் கிம் கர்தாஷியன்.

Next Story