மீண்டும் காதல் செய்ய தயாரான வெண்பா!


மீண்டும் காதல் செய்ய தயாரான வெண்பா!
x
தினத்தந்தி 25 Sep 2017 7:52 AM GMT (Updated: 25 Sep 2017 7:52 AM GMT)

தமிழ் சினிமாவில், தமிழ்நாட்டை சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிப்பது, அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்த பெண் கிடைப்பது அதனினும் அரிது.

இவை இரண்டும் இருந்தாலும் நன்றாக நடிக்கக் கூடிய திறமை இருப்பது அதனினும் அரிது. இத்தனை திறமைகளையும் உள்ளடக்கி தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் நாயகி, வெண்பா.

சமீபத்தில் வெளியான ‘காதல் கசக்குதய்யா’ படத்தில், முக்கால்வாசி நேரம் பள்ளி சீருடையிலேயே நடித்திருந்த வெண்பா, மீண்டும் காதல் செய்ய தயாராகி விட்டார். ‘பள்ளிப் பருவத்திலே’ படத்தின் நாயகியாக, கதைக்குள் இருக்கும் பிரச்சினையை படம் முழுவதும் இவர் தூக்கி சுமந்திருக்கிறார். இசையமைப்பாளர் சிற்பி மகன் நந்தா இந்த படத்தின் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

“நடிப்பதற்கு வாய்ப்புள்ள படங்களையும், கதாபாத்திரங்களையும் மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பேன்” என்கிறார், வெண்பா!

Next Story