ஆந்திரா போனால் ஐதராபாத் பிரியாணி!


ஆந்திரா போனால் ஐதராபாத் பிரியாணி!
x
தினத்தந்தி 25 Sep 2017 8:00 AM GMT (Updated: 25 Sep 2017 8:00 AM GMT)

அஞ்சலி, ஒரு ஆந்திர அழகி. தெலுங்கு பட உலகில் இருந்து தமிழ் பட உலகுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர்.

 ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். ‘அங்காடி தெரு,’ ‘எங்கேயும் எப்போதும்’ ஆகிய படங்கள் இவருக்கு மிகப்பெரிய திருப்பங்களாக அமைந்தன. இதுபற்றி அஞ்சலி கூறுகிறார்:-

“தற்போது நான், ஜெய் ஜோடியாக ஒரு தமிழ் படத்திலும், மம்முட்டி ஜோடியாக ஒரு மலையாள படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த 2 படங்களும் திரைக்கு வந்தால், எனக்கு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தென்னிந்திய நடிகைகளில் ஸ்ரீதேவியையும், ராதிகா சரத்குமாரையும் ரொம்ப பிடிக்கும். இரண்டு பேரின் நடிப்பையும் ரசித்து பார்ப்பேன்.

அதுபோல், தென்னிந்திய உணவுகளைத்தான் விரும்பி சாப்பிடுகிறேன். தமிழ்நாட்டில் எந்த ஊருக்கு போனாலும், சாம்பார் இட்லியை கேட்டு வாங்கி சாப்பிடு கிறேன். ஆந்திரா போனால், ஐதராபாத் பிரியாணி!”

Next Story