தியாகு மகன் டைரக்டர் ஆகிறார்!


தியாகு மகன் டைரக்டர் ஆகிறார்!
x
தினத்தந்தி 30 Nov 2017 10:45 PM GMT (Updated: 2017-11-30T12:57:52+05:30)

நகைச்சுவை மற்றும் குணச்சித்ர நடிகரான தியாகு இதுவரை, ‘ஒருதலை ராகம்’ உள்பட 300 படங்களில் நடித்து இருக்கிறார்.

நகைச்சுவை மற்றும் குணச்சித்ர நடிகரான தியாகு இதுவரை, ‘ஒருதலை ராகம்’ உள்பட 300 படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய மகன் சாரங்கன், அண்ணா பல்கலை கழகத்தில், ‘பி.ஈ’ (மெக்கானிகல் என்ஜினீயரிங்) படித்தவர். திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையில் இவர், டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி டைரக்டராக சேர்ந்தார். ‘அச்சம் என்பது மடமையடா,’ ‘என்னை நோக்கி பாயும் தோட்டா,’ ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்.

அடுத்து தனியாக படம் இயக்கும் ஆர்வத்துடன், டைரக்‌ஷன் வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறார். தியாகுவின் மகள் வித்யா ‘எம்.பி.பி.எஸ். முடித்து, ‘எம்.எஸ்.’ பட்டம் பெற்ற டாக்டர் ஆவார்! 

Next Story