கனடாவில், பாடல் வெளியீடு!


கனடாவில், பாடல் வெளியீடு!
x
தினத்தந்தி 8 Dec 2017 5:16 AM GMT (Updated: 8 Dec 2017 5:16 AM GMT)

cஇதுவரை 22 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். அவருடைய 23–வது படம், ‘நேத்ரா.’

டைரக்டர் ஏ.வெங்கடேஷ் இதுவரை 22 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். அவருடைய 23–வது படம், ‘நேத்ரா.’ இந்த படத்தின் பாடல் வெளியீடு, கனடாவில் நடந்தது. பெரிய பட்ஜெட் படங்கள் அல்லது பெரிய கதாநாயகர்கள் படங்களின் பாடல் வெளியீட்டு விழாக்களை மட்டுமே வெளிநாடுகளில் நடத்த முடியும் என்ற நம்பிக்கையை சிறு பட தயாரிப்பாளரான பா.ராஜசிங்கம் முறியடித்து காட்டினார்.

‘நேத்ரா’ படத்தில் வினய், தமன் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகி, சுபிஷா. வின்சென்ட் அசோகன், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி ஆகியோரும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள்.

Next Story