பி.சுசீலா இசை அமைக்கவில்லை


பி.சுசீலா இசை அமைக்கவில்லை
x
தினத்தந்தி 19 April 2018 10:15 PM GMT (Updated: 18 April 2018 7:33 AM GMT)

பாடகி பி.சுசீலா ஒரு படத்துக்கு இசையமைக்கப் போவதாக ஒரு தகவல் பரவியது.

பின்னணி பாடகி பி.சுசீலா, 50 வருடங்களுக்கு மேல் திரைப்படங்களில் பாடி வருகிறார். 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி படங்களில் அவர் பாடியிருக்கிறார். அவர் முதன்முதலாக ஒரு படத்துக்கு இசையமைக்கப் போவதாக ஒரு தகவல் மிக வேகமாக பரவியது.

இதுபற்றி அவரிடம், ‘தினத்தந்தி’ நிருபர் கேட்டபோது, ‘‘இது, நூறு சதவீதம் வதந்தி. நான் படங்களில் பாடுவதுடன் சரி. இசையமைக்கும் எண்ணம் எனக்கு வந்ததே இல்லை. எந்த படத்துக்கும் நான் இசையமைக்கப் போவதில்லை’’ என்றார். 

Next Story