‘‘பாடலின் வெற்றிக்கு இசையமைப்பாளர் மட்டும் காரணம் இல்லை’’


‘‘பாடலின் வெற்றிக்கு இசையமைப்பாளர் மட்டும் காரணம் இல்லை’’
x
தினத்தந்தி 19 April 2018 10:30 PM GMT (Updated: 2018-04-18T13:12:41+05:30)

நடிகர் சிங்கமுத்து ‘பாசக்கார கூட்டம்’ படத்தின் அனைத்து பாடல்களையும் சிங்கமுத்து எழுதியிருக்கிறார்.

நடிகர் சிங்கமுத்து, ‘பாசக்கார கூட்டம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில், அவரது மகன் வாசன் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் அனைத்து பாடல்களையும் சிங்கமுத்து எழுதியிருக்கிறார்.

50 இசைக்கலைஞர்களை வைத்து சிங்கமுத்து வித்தியாசமான ஒரு பாடலை பதிவு செய்து இருக்கிறார். சின்மயி, ஹரிசரண் பாடியிருக்கும் ‘‘எங்க குலசாமி, மல்லிகைப்பூ...’’ என்ற பாடல் மிகுந்த வரவேற்பை பெறும் என்று கூறும் சிங்கமுத்து, ‘‘ஒரு பாடலின் வெற்றிக்கு இசையமைப்பாளர் மட்டும் காரணம் இல்லை. பாடல் ஆசிரியர், பாடகர், சவுண்டு என்ஜினீயர் என்று பலருடைய திறமையும் அடங்கி இருக்கிறது’’ என்கிறார். 

Next Story