சபாஷ் சரியான போட்டி


சபாஷ் சரியான போட்டி
x
தினத்தந்தி 21 April 2018 6:49 AM GMT (Updated: 21 April 2018 6:49 AM GMT)

ஹாலிவுட் நடிகைகளின் கவனம் பாலிவுட் பக்கம் திரும்பி இருக்கிறது.

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் இருவரும் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் படங்களில் நடிக்கச் சென்றனர். அதற்கு பதிலடி தரும் வகையில் ஹாலிவுட் நடிகைகளின் கவனம் பாலிவுட் பக்கம் திரும்பி இருக்கிறது.

குறிப்பாக ‘கெஸினோ ராயல்’ திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்டிற்கு ஜோடியாக நடித்த கேத்ரினா முரினோ, 2016-ம் ஆண்டு ‘பீவர்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவர் கவர்ச்சி காட்சிகளில் அதிகளவில் ஜொலித்ததால், அவருக்கு பாலிவுட் இயக்குனர்கள் வாய்ப்பளிக்க முன்வந்தனர். இருப்பினும் ஹாலிவுட்டில் சில மாதங்கள் பிசியாக இருந்துவிட்டு, தற்போது மீண்டும் பாலிவுட்டிற்கு வந்திருக்கிறார். அதுபற்றி அவரிடம் கேட்டதற்கு ‘பாலிவுட் நடிகைகள் எங்களது வாய்ப்புகளை தட்டிப்பறித்தனர். அதனால் அவர்களது வாய்ப்புகளை தட்டிப் பறிக்க பார்க்கிறோம். ஹாலிவுட் நடிகைகளுக்கு இதழ் முத்தம், கவர்ச்சி காட்சிகள் எல்லாம் சர்வ சாதாரணம். அதனால் பாலிவுட்டில் நடிப்பது எளிதாகிறது. மேலும் பாலிவுட் திரைப்படத்தில் ஒரு ஹாலிவுட் நடிகை நடித்தால், அதை ஹாலிவுட் தரத்திற்கு விளம்பரம் செய்கிறார்கள். அதுவும் தயாரிப்பாளர் களுக்கு லாபம் தானே?’ என்கிறார், கேத்ரினா முரினோ. 

Next Story